ஒய்யார மயில் மேல் உலகாளும் முருகா
ஓங்கார தேர் மேல் உயிர் காக்க வா வா
ஒய்யார மயில் மேல் உலகாளும் முருகா
ஓங்கார தேர் மேல் உயிர் காக்க வா வா
ஒய்யார மயில் மேல் உலகாளும் முருகா
ஓங்கார தேர் மேல் உயிர் காக்க வா வா
கூவிய மயிலேறும் குருபரா வருக
தாவியே தகரேறும் ஷண்முகா வருக
கூரிய வேலேந்தும் குகனே வருக
சேவலின் கொடியேந்தும் செவ்வேல் வருக
ரத்னகிரி வாழ்கின்ற தெய்வசிகாமணியே
ஷண்முக துய்ய மணி தணிகைவேல் மணியே
காலில் தண்டை கலீர் கலீர் என
சேலில் சதங்கை கணீர் கணீர் என
மகர குண்டலம் பளீர் பளீர் என
மலர் படுப்பணை தகதகவென
பத்ரகாளி பணிவிடை செய்ய
சக்திகளெல்லாம் தாண்டவம் ஆட
அஷ்ட பைரவர் ஆனந்தமாட
இஷ்ட சூலிகள் வாழ்த்துக்கள் பாட
அஷ்டலட்சுமி அம்பிகை பார்வதி
கந்தா கடம்பா என்றுனை போற்ற
சசசச ஓம் க்லீம் ரரரர ரீம் ரீம்
வவவவ ஆஹோ னனனன வா ஓம்
பபபப சாம் சோம் வவவவ வா போ
னனனினும் னனனினும் நாட்டிய அர்ச்சனை
கஹ்ஹ கஹகஹ கந்தனே வருக
இக்ஹ இஹஹா ஈசனே வருக
தக்க தகதக சற்குரு வருக
பக்க பஹ பஹ பறந்தே வருக
சக்தியே படைத்த சிவந்த நாவை
கட்டுகள் கட்டி மடக்குவதா
சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேல்தான்
இக்கட்டை அறுக்க மறுக்கிறதா
கீழ்த்திசைக் கட்டை கிருபாகர காக்க
மேல்திசைக் கட்டை மயிலோன் காக்க
தென்திசைக் கட்டை தண்டாயுதம் காக்க
வடதிசை கட்டை வடபழனியும் காக்க
முகத்தின் அழகினை முத்துவேல் காக்க
கழுத்து மார்பினை நல்வேல் காக்க
தோள்கள் இரண்டினை தூயவேல் காக்க
வயிறு முதுகினை வெற்றிவேல் காக்க
சிற்றிடை முழுதும் செவ்வேல் காக்க
தொடைகள் இரண்டும் திருவேல் காக்க
முன் கை பின் கை முருகவேல் காக்க
உச்சிப் பாதத்தை கதிர்வேல் காக்க
உயிரின் ஆக்கத்தை நல்வேல் காக்க
வல்வினை யாவும் வஜ்ரவேல் காக்க