Omkara Vadivam – Murugan Bhajan Lyrics
ஓம்கார வடிவம பாடல் வரிகள்
ஓம்கார வடிவம் மயிலுருவம்
அதில் ஒளியான முருகன் பரப்ரம்மம்
வெற்றியின் உருவமே வேல்வடிவம் அவன்
ஆறுதல் உருவமே ஆறுமுகம்
விளங்கிடும் திருவாய் வேதவடிவம் அவன்
திருவடியே என்றும் பெரும் செல்வம் (ஓம்கார)
பன்னிருதோல்களும் பல உலகம் அவன்
உயர்த்திய சேவலே உபநிடதம்
எங்கும் எதிலும் அவன் வடிவம் அதை
வணங்குவதே என்றும் பெரும் தர்மம் (ஓம்கார)
மலரின் அழகே மால்மருகன் அதில்
மணக்கும் வாசமும் ஆறுமுகன்
பாட்டின் உருவமே பாலமுருகன் அந்த
பாட்டின் பொருளும் வேல்முருகன் (ஓம்கார)