சபரி மலைக்கே புறப்படுவோம்
சபரி மலைக்கே புறப்படுவோம்
சாஸ்தா புகழைப் பாடிடுவோம்
சரணம் சரணம் என முழங்கிடுவோம்
சத்திய ஜோதியை வணங்கிடுவோம்
(சபரி மலைக்கே புறப்படுவோம்)
ஆசை மயக்கம் அல்லல் கொடுக்கும்
அய்யனின் நாமம் ஞானம் வளர்க்கும்
தன்னை மறக்கும் தியானம் சிறக்கும்
தயவு பிறக்கும் உயர்வு நிறைக்கும்.
(சபரி மலைக்கே புறப்படுவோம்)
புலிப்பால் கொணர்ந்த வீரன் அவன்
பூதலம் புகழும் பாலன் அவன்
வலிமைகள் வழங்கும் வரதன் அவன்
வாவரு சாமியின் தோழன் அவன்
(சபரி மலைக்கே புறப்படுவோம்)
கரிமலை ஏற்றம் கனிவு தரும்
கருணையில் யாவும் இனிமை தரும்
அறிவதை அறிந்து அவனைத் துதித்தால்
அற்புதக்காட்சி நேரில் கிடைக்கும்
(சபரி மலைக்கே புறப்படுவோம்)
ஒரு மெய் தமிழ் பதினெட்டு
உத்தம சித்தர்கள் பதினெட்டு
ஓதும் புராணம் பதினெட்டு
உன்னருள் படியும் பதினெட்டே
(சபரி மலைக்கே புறப்படுவோம்)
கதிரவன் உதிக்கும் ஜோதிமலை
கதி நமக்கருளும் காந்தமலை
நற்றவ ஞானியர் வாழும் மலை
நாயகன் அய்யன் ஆளும் மலை
(சபரி மலைக்கே புறப்படுவோம்)