சமயபுரத்தாளே மாரியம்மா பஜனை பாடல்
Samayapurathale Maariamma Bhajanai Song Lyrics
சமயபுரத்தாளே மாரியம்மா – அம்மா
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா
மல்லிகைச் சரம் தொடுத்து மாலையிட்டோம் – அரிசி
மாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலும் வைத்தோம்
துள்ளியே எங்கள் முன்னே வாருமம்மா – அம்மா
தூயவனே என் தாயே மாரியம்மா
பட்டு பீதாம்பரத்தில தாவணியும் – உனக்கு
பாவாடை சேலைகளும் கொண்டு வந்தோம்
எட்டு திசைகளையும் ஆண்டவளே – அம்மா
ஈஸ்வரியே என் தாயே மாரியம்மா
கத்தி கதறுகிறோம் கேட்கலையோ – தாயே
கல்லேதான் உன் மனமும் கரையலையோ
உலகமே ஆடுதம்மா உன் சிரிப்பிலே – எங்கள்
உமையவளே தாயே மாரியம்மா
காலிற் சலங்கை ஒலி காதைத் துளைக்குதம்மா
பாவாடை தாவணியும் தானாக ஆடுதம்மா
பூவாடை வீசுதம்மா பூமகளே
உனக்கு பாமாலை கொண்டு வந்தோம் பாருமம்மா