Sonnal Inikkudhu
சொன்னால் இனிக்குது சுகமாய் இருக்குது
சொன்னால் இனிக்குது
சுகமாய் இருக்குது
கண்ணாய் மனியாய் உன் உடல் ஜொலிக்குது
ஹரிஹர புத்திரன் அவதாரமே,
அதிகாலை கேட்கின்ற பூபாளமே
அணுவுக்குள் அணுவான ஆதாரமே
நான் அன்றாடம் படிக்கின்ற தேவாரமே
சொன்னால் இனிக்குது
சுகமாய் இருக்குது
கண்ணாய் மனியாய் உன் உடல் ஜொலிக்குது
வேதத்தின் விதையாக விழுந்தவனே,
வீரத்தின் கனையாக பிறந்தவனே
பேதத்தை போராடி அழித்தவனே
ஞான வேதாந்த பொருளாக திகழ்பவனே
சொன்னால் இனிக்குது
சுகமாய் இருக்குது
கண்ணாய் மனியாய் உன் உடல் ஜொலிக்குது
வில்லுடன் அம்புடன் வேங்கை புலியுடன் போர்க்களம் புகுந்தவனே
சொல்லி முடித்திடும் முன் வரும் பகையை கிள்ளி எறிந்தவனே
அள்ளி எடுத்து அருள் தருபவனே .. அன்பே வடிவாய் இருப்பவனே…
உன் புகழை
சொன்னால் இனிக்குது
சுகமாய் இருக்குது
கண்ணாய் மனியாய் உன் உடல் ஜொலிக்குது