Thaaye Mookambigaiye Lyrics in Tamil
தாயே மூகாம்பிகே
தாயே மூகாம்பிகே, ஜெகன்
மாயே லோகாம்பிகே!
தேவியர் மூவரும் மேவிய உருவே – அருள்
தண் நிழல் வழங்கிடும் புண்ணியத் தருவே!
(தாயே மூகாம்பிகே)
நான்முகன் தேவி நா மகளே,
நான்மறை ஏத்தும் பா மகளே,
ஞான மழை முகிலே!
தாமரைப் பூவில் பாவலர் நாவில்,
அமர்ந்தவளே அருள் வீணை மீட்டும்
ஞான மழை முகிலே!
மூடர்கள் வாக்கும், ஊமைகள் நாக்கும்,
கவித்துவம் கொண்டாடுவதும்,
மகத்துவம் கண்டாடுவதும்,
உனதருள் பார்வை உதவிய வாழ்க்கை
மேலாம் கல்வி வழங்கிடும் செல்வி
ஞான மழை முகிலே!
பிரம்ம லோகத்திலே, கர்ம யோகத்திலே,
ஞான பீடத்திலே, மேவும் காயத்ரியே!
வேத கோஷப் ப்ரியே, சங்கீத நாதப் ப்ரியே!
தர்ம சாஸ்திரப் ப்ரியே, தர்க்க நியாயப் ப்ரியே!
நாரணன் தேவி திருமகளே,
நவநிதி யாவும் தரும் மகளே!
ஆனந்த வாழ்வின் ஆதாரம் நீயே!
அருள் உள்ளம் வாய்ந்த பொருள் வெள்ளமே!
பெருமானும் கொஞ்சும் ஒரு மானும் நீயே,
திருமார்பில் வாழும் மகாலக்ஷ்மியே!
வறுமைப் பிணியின் வருத்தம் தணிய உதவும் மருந்தே
பொன்னும் பொருளும் மண்ணும் புகழும்
நிதம் நினது பதம் பணியத் தரும் திருவே!
ஆனந்த வாழ்வில் ஆதாரம் நீயே!
அருள் உள்ளம் வாய்ந்த பொருள் வெள்ளமே!
மலை மகள் நீயே மாகாளியே!
உமையவள் நீயே ஓம்காரியே!
திரிபுர சுந்தரியே, திரிசூலி நிரந்தரியே,
தாமரைக் கழல், தளிர் நடை இட
பூவிழிக் கனல் பொழி மழை என
சுடர் விட, இடர் விட, நடமிடும்..
(திரிபுர சுந்தரியே)
கருங்குழல் மலராட, கனியிதழ் நகையாட,
அருமறை துதி பாட, அரவுகள் படமாட,
எட்டுத் திசை சிதற, சுட்டும் விழி பதற,
தத்தோம் நடை அதிர, தண்டை மணி உதிர
தாம் கிட, தரி கிட, தை என ஒலித்திட
தீம் கிட, திமி கிட, தோம் என நடமிடும்
ஓம் சக்தி – ஓம் சக்தி – ஓம் சக்தி – ஓம் சக்தி – ஓம்!
இந்த பாடலை பற்றி
படம்: தாய் மூகாம்பிகை
பாடல்: வாலி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: பாலமுரளி கிருஷ்ணா,MSV ,சீர்காழி கோவிந்தாராஜன்