வெள்ளி மலர் கண்ணாத்தா
வேப்பம் பூ கண்ணாத்தா
வேலரும்பு கண்ணாத்தா
வீச்சருவா கண்ணாத்தா
திரிசூல கண்ணாத்தா
திரிசங்கு கண்ணாத்தா
தங்கநிற கண்ணாத்தா
தாமரை பூ கண்ணாத்தா
மின்சார கண்ணாத்தா
மீன் போன்ற கண்ணாத்தா
ஆத்தா
ஆத்தா கண்ணாத்தா
என்னை நீ பாத்தா
கவலை எல்லாம்
தீர்ந்து விடும் ஆத்தா
பூவா பூவத்தா
சிரிச்சா மழையாத்தா
கருவிழியில் தீ
எரியும் பாத்தா
எட்டு திசைகளில் நிற்பவளே
எரிகின்ற நெருப்பினில் குளித்தவளே
இடி மின்னல் புயல்போல சிரிப்பவளே
இந்திரன் சபையினை ஆண்டவளே
விண்ணாத்தா மண்ணாத்தா
நீ எங்கள் கண்ணாத்தா வா வா
வெள்ளி மலர் கண்ணாத்தா
வேப்பம் பூ கண்ணாத்தா
வேலரும்பு கண்ணாத்தா
வீச்சருவா கண்ணாத்தா
திரிசூல கண்ணாத்தா
திரிசங்கு கண்ணாத்தா
தங்கநிற கண்ணாத்தா
தாமரை பூ கண்ணாத்தா
மின்சார கண்ணாத்தா
மீன் போன்ற கண்ணாத்தா
அம்மா
பாளையத்து கண்ணு ரெண்டால்
பாவம் போக்கத்தான் வாடி அம்மா
வேற்காட்டு கண்ணு ரெண்டால்
தீர்ப்பை சொல்லத்தான் வாடி அம்மா
காஞ்சிபுரம் கண்ணு ரெண்டால்
கவலை போக்கத்தான் வாடி அம்மா
மாமதுரை கண்ணு ரெண்டால்
மயக்கம் தீக்கத்தான் வாடி அம்மா
வா கலகலனு பலபலனு
வெள்ளி கண்ணு சிரிக்க
படபடனு துடுதுடுனு
மின்னல் கண்ணு தெறிக்க
குளுகுளுனு சிலுசிலுனு
மேக கண்ணு பொழிய
தகதகனு பகபகனு
நெருப்பு கண்ணு எரிய
கண்ணபுரம் கண்ணு ரெண்டும்
கோபம் கொண்டால் தாங்காதம்மா
நீரும் தீயா எரியும் அம்மா
சிங்கத்துல நான் ஏறி
சீறி வருவேன்டா பகையறுக்க
சொப்பணமா மாத்துவேண்டா
பில்லிசூனியத்த மூச்சறுத்து
பாவிகளை அம்மன் நானே
தேடி வந்து பழிதீர்ப்பேன்டா
காடும்மேடும் இருண்டுபுட்டா
ஏழு லோகமும் தாங்காதடா
அட ரத்தத்துல முகம் கழுவும்
பத்ரகாளி நான்தான்
நான் பத்தினிதான் உடும்புக்காரி
பாத்துக்கடா நீதான்
நான் மண்டையோட்டு மாலை
அணியும் மாயக்காரி தான்டா
நான் வேப்பமரம் உள்ளிருக்கும்
மருத்துவச்சி தான்டா
மயானம்தான் என் வீடு டா
மருவத்தூரும் என் வீடு டா
மண்ணும் மனசும் என் வீடு டா
வெள்ளி மலர் கண்ணாத்தா
வேப்பம் பூ கண்ணாத்தா
வேலரும்பு கண்ணாத்தா
வீச்சருவா கண்ணாத்தா
திரிசூல கண்ணாத்தா
திரிசங்கு கண்ணாத்தா
தங்கநிற கண்ணாத்தா
தாமரை பூ கண்ணாத்தா
மின்சார கண்ணாத்தா
மீன் போன்ற கண்ணாத்தா