Vaikarai Pozhuthin Vaasalile
வைகறை பொழுதின் வாசலிலே
ஓம் க்லீம் குமாராய குங்கும வர்ணாய
மஹா மோஹனாய மகா ஸ்தம்பனாய
பேராசைஞ விக்ரம்ச காய
வள்ளி தேவ சேனா பதையே நமோ நமஹ
சுப்ரமண்யோகம் சுப்ரமண்யோகம் சுப்ரமண்யோஹோ
தத்புருஷாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி
தந்ன சண்முக ப்ரசோதயாத்
வைகறை பொழுதின் வாசலிலே
திருக்காட்சி தந்தான் மலையினிலே
கந்தனின் அழகை காண்கையிலே
என் கண்களும் குளிர்ந்தது காலையிலே
கண்களும் குளிர்ந்தது காலையிலே
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையற தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
வைகறை பொழுதின் வாசலிலே
திருக்காட்சி தந்தான் மலையினிலே
மலையினிலே . . . சென்னிமலையினிலே
முருகா முருகா முருகையா
உருகாதோ உந்தன் மனமய்யா
கண்களில் நீரும் கசியுதய்யா
என் கண்களில் நீரும் கசியுதய்யா
உன்னை கண்டதும் கவலைகள் பறந்தய்யா
கண்களில் நீரும் கசியுதய்யா
உன்னை கண்டதும் கவலைகள் பறந்தய்யா
கண்டதும் கவலைகள் பறந்தய்யா
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையற தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
வைகறை பொழுதின் வாசலிலே
திருக்காட்சி தந்தான் மலையினிலே
மலையினிலே . . . ஆதி பழநியிலே
காலடி ஓசையை கேட்டேனம்மா
வருவது குகனென்று அறிந்தேனம்மா
மெல்ல நகைத்து என்னை அழைத்தானம்மா
மெல்ல நகைத்து என்னை அழைத்தானம்மா
என் நினைவும் அவன் பின்னே சென்றதம்மா
நினைவும் அவன் பின்னே சென்றதம்மா
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையற தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
வைகறை பொழுதின் வாசலிலே
திருக்காட்சி தந்தான் மலையினிலே
அலங்கார தீபம் அழைக்கின்றதே
அந்த சிங்கார சென்னிமலையினிலே
ஓங்கார மணியோசை ஒலிக்கின்றதே
ஓங்கார மணியோசை ஒலிக்கின்றதே
அந்த ரீங்காரம் செவியில் ஓம் என்றதே
ரீங்காரம் செவியில் ஓம் என்றதே
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையற தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
வைகறை பொழுதின் வாசலிலே
திருக்காட்சி தந்தான் மலையினிலே
கந்தனின் அழகை காண்கையிலே
என் கண்களும் குளிர்ந்தது காலையிலே
கண்களும் குளிர்ந்தது காலையிலே
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையற தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட