ஸ்ரீமந்நாராயணா ஸ்ரீமந்நாராயணா
ஸ்ரீமந்நாராயணா ஸ்ரீமந்நாராயணா
ஸ்ரீமந்நாராயணனே உன் பாதமே சரணம்!
ஸ்ரீமந்நாராயணா ஸ்ரீமந்நாராயணா
ஸ்ரீமந்நாராயணனே உன் பாதமே சரணம் சரணம்!
அவதாரம் பத்திலும் அழகான தத்துவம்
அதுதானே ஆதாரம் எந்நாளும் சத்தியம்!
ஆழ்வார்கள் பாசுரம் ஆனந்த சாகரம்
பெருமாளின் கோபுரம் வைகுண்ட தரிசனம்!
வேதங்கள் நாலுமவன் அங்கங்களாகும்
சித்தாந்தமென்னும் அருள் தங்கங்களாகும்!
வைணத்தை சொல்லும் அவன் திவ்ய நாமம்
அதை சொல்லத்தானே ஸ்ரீ விஷ்வ ரூபம்!
தேவாதி தேவர்கள் தினம் பாடும் சீடன்
அதைக்கேட்டு எழுவானே ஸ்ரீ பத்மநாபன்!
கீதோபதேசம் செய்தானே கிருஷ்ணன்
இங்கேயும் அர்ச்சுனன் வருவானா கண்ணன்!
ஸ்ரீமந்நாராயணா ஸ்ரீமந்நாராயணா
ஸ்ரீமந்நாராயணனே உன் பாதமே சரணம்!
ஸ்ரீமந்நாராயணா ஸ்ரீமந்நாராயணா
ஸ்ரீமந்நாராயணனே உன் பாதமே சரணம் சரணம்!
ஓம் நமோ நாராயணாய