அழகிய மயிலே அபிராமி
மன்னனுக்கு தாரங்கத்தை
நிலவாகக் காட்டினாய் அம்மா
சுப்ரமணியனுக்கு அந்தாதிப் பாட
வழி காட்டினாய் அம்மா
அன்புடன் நீ தந்த நூறு பாடல்கள்
அருந்தேன் அம்மா
அதை எந்நாளும் பாடிட அருள்வாய் நீ அம்மா
அழகிய மயிலே அபிராமி
அஞ்சுக மொழியே அபிராமி
அழகிய மயிலே அபிராமி
அஞ்சுக மொழியே அபிராமி
ஆதிக் கடவூர் அபிராமி
ஆனந்த வடிவே அபிராமி
அழகிய மயிலே அபிராமி அஞ்சுக மொழியே அபிராமி
இன்னமுதம் நீ அபிராமி ஈசனின் கொடியே அபிராமி
இன்னமுதம் நீ அபிராமி ஈசனின் கொடியே அபிராமி
உன் பதம் சரணம் அபிராமி ஊழ்வினை அழிப்பாய் அபிராமி
அழகிய மயிலே அபிராமி அஞ்சுக மொழியே அபிராமி
என் மனம் அறிவாய் அபிராமி ஏன் பயம் என்பாய் அபிராமி
என் மனம் அறிவாய் அபிராமி ஏன் பயம் என்பாய் அபிராமி
ஐந்தெழுத்தாலே அபிராமி ஐந்தொழில் புரிவாய் அபிராமி
ஒன்பது மணியே அபிராமி ஓங்காரப் பொருளே அபிராமி
ஒன்பது மணியே அபிராமி ஓங்காரப் பொருளே அபிராமி
ஒளஷதம் நீயே அபிராமி அம்புலி காட்டிய அபிராமி
அழகிய மயிலே அபிராமி அஞ்சுக மொழியே அபிராமி
ஆதிக் கடவூர் அபிராமி ஆனந்த வடிவே அபிராமி
அழகிய மயிலே அபிராமி அஞ்சுக மொழியே அபிராமி