Karunaiyodu Azhaikindra Kaiyedu Lyrics in Tamil
கருணையோடு அணைக்கின்ற கையேது
கருணையோடு அணைக்கின்ற கையேது – கொடும்
காட்டில் நமை வழிகாட்டும் பொருளேது
( கருணையோடு அணைக்கின்ற )
பம்பையாற்றில் புனிதமான குளிரேது – நமை
பாட்டுப் பாடி தாலாட்டும் அன்னை ஏது
ஐயப்பன் சுவாமி ஐயப்பன்
ஐயப்பன் சுவாமி ஐயப்பன்
( கருணையோடு அணைக்கின்ற )
பந்தளத்தில் பெருமை சேர்த்த புண்யமேது – நோன்பால்
பக்தரை சுவாமியாக்கும் உருவமேது
பந்தளத்தில் பெருமை சேர்த்த புண்யமேது – நோன்பால்
பக்தரை சுவாமியாக்கும் உருவமேது
சம்சாரக் கடலினிலே தோணியேது
சம்சாரக் கடலினிலே தோணியேது
பாவ சுவடுகளைச் சுட்டெரிக்கும் அக்னியேது
ஐயப்பன் சுவாமி ஐயப்பன்
ஐயப்பன் சுவாமி ஐயப்பன்
( கருணையோடு அணைக்கின்ற )
ஜாதிமத பேதமில்லா சமத்துவ தீபம் – காட்டி
மனிதர்களை புனிதராக்கம் மகர தீபம்
ஜாதிமத பேதமில்லா சமத்துவ தீபம் – காட்டி
மனிதர்களை புனிதராக்கம் மகர தீபம்
சைவ வைஷ்ணவங்கள் ஒன்றாய் இணைத்து சேர்க்கும்
மகா சன்னிதானம் சானித்ய மனதில் சேர்க்கும்
ஐயப்பன் சுவாமி ஐயப்பன்
ஐயப்பன் சுவாமி ஐயப்பன்
( கருணையோடு அணைக்கின்ற )