முருகா என்றழைக்கவா முத்துக்குமரா என்றழைக்கவா
முருகா என்றழைக்கவா முத்துக்குமரா என்றழைக்கவா
கந்தா என்றழைக்கவா கதிர்வேலா என்றழைக்கவா
எப்படி அழைப்பேன் உன்னை எங்கே காண்பேன்
ஆறுபடை வீடெங்கும் தேடி வந்தேன் அப்பா
அங்கெங்கும் காணாமல் வாடி நின்றேன் அப்பா.
அருணகிரி மனம் நொந்து தவித்தபோது –நீ
அருள்கொடுத்து ஒளியாக நின்றாயப்பா –உன்னை
நாவினிலே வேலால் எழுதிச் சென்றாயப்பா-முருகா
நற்றமிழ் இசையைப் பாட வைத்தாயப்பா-அந்த
பாவினிலே மனமுருகி நின்றாயப்பா
உலகுக்கு பண்புமிகும் தமிழ்க் கவியை ஈன்றாயப்பா–உன்னை
முருகாற்றுப்படை பாடி நக்கீரர் அழைக்க –நீ
முன் தோன்றி வழி அமைத்து கொடுத்தாயப்பா
கலிவெண்பா படைத்து குருபரர் நினைத்தாரப்பா-நீ
கந்தவேளாய் வந்து நின்று சிரித்தாயப்பா
நாளெல்லாம் உன்னை பாடுகின்றேன் அப்பா-முருகா
நல்லருள் பொழிந்து ஆடி வருவாயப்பா
கண்கள் குளிற வந்து நின்றாடப்பா-நீ
காலமெல்லாம் துணையாக இருந்தாளப்பா-உன்னை
முருகா